‘வேண்டும் என்றே செஞ்ச மாதிரி இருக்கு’… சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து ; சந்தேகத்தை கிளப்பும் அதிமுக!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 10:41 am
Quick Share

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா எனும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனிடையே, அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி வந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன.

மேலும் படிக்க: 2வது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்த நிலையில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, நள்ளிரவு 3 மணியளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சவுக்கு சங்கர் கைது குறித்து X தளத்தில் அதிமுக பிரமுகர் காயத்ரி ரகுராம் விடுத்துள்ள பதிவில், “ஆனால் ஒரு நபரை முடிக்க இவ்வளவு முயற்சி எடுக்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு இவ்வளவு insecurity உள்ளதாக நான் ஆரம்பத்தில் நம்பவில்லை. சவுக்கு சங்கர் stay safe.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மோகன் பாபு என்பவரோ, “சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. சவுக்கு சங்கர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்! இதெல்லாம் சரியில்லை! வேண்டும் என்றே செஞ்சா மாதிரி இருக்கு. ஒரு அளவுதான் எல்லாமே முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ! படத்துல பார்ப்பதுபோல் இருக்கு இதெல்லாம் !, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 123

0

0