பிரதமர் மோடிக்கு இன்னும் ஒருவாரம் தான் டைம்…. துரோகத்திற்கு துணைபோகும் அண்ணாமலை ; கெடு விதித்த காங்கிரஸ்..

Author: Babu Lakshmanan
22 May 2024, 4:44 pm
Quick Share

ஒரு வாரத்திற்குள் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை எனில், தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஒரு வாரத்திற்குள் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.
அண்ணாமலை தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் போக முடியாத அளவிற்கு நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை எட்டப்பன் வேடமிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை பற்றி உண்மையை தான் கூறியுள்ளார். மேலும், பாஜகவினரும் ராகுல் காந்தி புகழ்ந்துதான் பேசி வருகிறார்கள். நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தமிழர்களை திருடர்கள் என்று கூறியுள்ளார். அமித்ஷா தமிழர் ஒடிசாவை ஆள நினைப்பதாக கூறி தமிழர்களை அவமதித்து பேசி உள்ளனர். சட்டம் 151 மீறி வருகின்றனர்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கரை தூக்கில் போடுங்க… நீதிமன்றத்தில் ஒழித்த முழக்கம் ; மதுரையில் பரபரப்பு..!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒடிசாவை ஆள நினைப்பதா..? அமைச்சர் கேட்கிறார். அநாகரிகமான அரசியலை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் எப்போது விழித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மொழியின் வரலாற்றை சாதாரண மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி ஏன் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து பாஜக தமிழர்களை இழிவு படுத்திபேசி வருகிறது. இந்த நிலை தொடர்ந்து வந்தால் முற்றுகை போராட்டம் நடத்தி பாஜகவினரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுவோம். உலகத்திலேயே இப்படி ஒரு இழிவான பிரதமரை உலகம் கண்டதில்லை. பிரதமர் மோடி பேசியதற்கு பாஜகவினர் ஒரு கண்டனம் தெரிவித்தார்களா..? இதிலிருந்து பாசிச பாஜகவின் நிலை தெரிகிறது, எனக் கூறினார்.

Views: - 147

0

1