Gift வாங்கித் தருவதாகக் கூறி 13 வயது சிறுமி பலாத்காரம்… கட்டாய குழந்தை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர்… 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 4:32 pm

கரூர் : பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதாக திருச்சிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, திருமணம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, மனச்சனப்பட்டி பகுதியினை சார்ந்த கலாராணி. இவரது கணவர் சிவக்குமார் என்பவரது அக்காள் பெரியக்காள் புரசம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, கலாராணியின் மகள் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில், சிறுமியின் அத்தையான பெரியக்காள் புரசம்பட்டியில் வசித்து வரும் நிலையில், அந்த சிறுமியை 9ம் வகுப்பு படிக்க, மேலப்புதூரில் படிக்க வைப்பதாக கூறி அங்கேயே தங்கி படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் அத்தை பெரியக்காள் மகன் சேகர் (20), கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி, இந்த சிறுமிக்கு பிறந்த நாள் எனக்கூறி பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவதாக, திருச்சிக்கு சிறுமியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகள் கூறி, கட்டாயப்பட்டுத்தி பாலியல் நடத்தியுள்ளார்.

பின்னர், சேகர் மலேசியாவிற்கு வேலைக்காக செல்ல உள்ளதாக அறிந்த சிறுமி, “என் வாழ்க்கை என்ன ஆவது. வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நான் என்ன செய்வது,” என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து, அதே வருடம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கடத்தி சென்று 13 வயதே ஆன அந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் உனக்கு திருமணம் வயது ஆன உடன், வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்றும், அதுவரை தாலி என்னிடம் இருக்கட்டும் என்று கூறி கட்டிய தாலியை கழட்டி வாங்கி விட்டு, சேகர் வெளிநாடு சென்றுள்ளார்.

இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி மலேசியாவிலிருந்து ஊருக்கு வந்த பின்னர், சேகர் அதே சிறுமியை ‘நான் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேனே,’ என்று கூறி மீண்டும் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, சிறுமிக்கு 15 வயது ஆகியுள்ளது.

இந்நிலையில், சேகர் ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக சிறுமியிடம் கூறி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் தேதி மனச்சனம்பட்டிக்கு சென்று விட்டு, அவரது சொந்த ஊரில், அடுத்த நாள் மீலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, குழந்தை திருமணம் செய்த பிறகு, வெளிநாடு சென்று வீட்டு மீண்டும் கட்டாய பாலியம் தாக்குதல் நடத்திய சம்பவங்களை எல்லாம் அந்த சிறுமி 17 ம் தேதி அந்த சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கலாராணி குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டும், இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு இன்று கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி நசிமாபானு, குற்றவாளி சேகருக்கு போக்சோ வழக்கின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அந்த ஆயிரம் கட்டத்தவறினால், மேலும் ஒரு வருடம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், குழந்தை திருமணம் மற்றும் கட்டாயமாக சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த்தோடு, கட்டாய பாலியல் தொந்தரவு செய்ததற்காக 10 ஆண்டுகள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் கட்டத்தவறினால், மேற்கொண்டு ஒரு வருடம் மெய்க்காவல் தண்டனையும், குழந்தைதிருமணம் செய்ததற்காக இரண்டு ஆண்டு சிறைதண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும், 3 மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!