மாற்று இடத்திற்கு மாறிய கரூர் காய்கறி சந்தை… இடநெருக்கடியால் கொரோனா தொற்று பரவும் அபாயம்…!!

By: Babu
29 May 2021, 3:29 pm
karur market - - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் பேருந்து நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மாற்று இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று அதிகரிப்பதன் காரணமாக தினசரி சந்தைகள் மூடப்பட்டு தற்காலிக மொத்த காய்கறி விற்பனை சந்தை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.

நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கும் பொது மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நகரும் அங்காடி வாகன சில்லரை விற்பனையாளர்கள் இந்த சந்தையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனையாளர்கள் அதிக அளவில் கூடியதால் சமூக இடைவெளி இல்லாமல் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கரூர் தாந்தோணிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், இன்று முதல் தற்காலிக மொத்த விற்பனை காய்கறி சந்தை இடம் மாற்றப்பட்டுள்ளது.

வெண்ணைமலை (தனியார்) கொங்கு கல்லூரி வளாகத்தில் 1 முதல் 28 வார்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களும், தாந்தோணிமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 29 முதல் 48 வார்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களும் காய்கறிகள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் 42 வியாபாரிகள் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 52 அங்காடி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெண்ணைமலை தனியார் கல்லூரியில் 55 வியாபாரிகளும், 41 அங்காடி வாகனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தாந்தோணிமலை மாவட்ட விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் மொத்த விற்பனை காய்கறி சந்தையில் ஒரே இடத்தில் வியாபாரிகள் அருகருகே கடைகள் போட்டுள்ளனர். இதன் காரணமாக பொருட்களை வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடினர். மேலும், முறையாக முக கவசம் அணியாமல் கூடிய வியாபாரிகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Views: - 138

0

0