முகநூல் ரோமியா காசி வழக்கு : இன்டர்போல் உதவியை நாட சிபிசிஐடி முடிவு!!

28 September 2020, 5:38 pm
FB Romeo- updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டல் விடுத்த காசியின் நண்பரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து நகை பணம் கொள்ளையடித்து, வெளியில் சொன்னால் அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காசி கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் காசியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அதில் ஒருவனை கைது செய்தனர், மேலும் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டல் விடுத்த காசியின் நண்பரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்குகளிலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளை இந்த வழக்கின் உள்ள குற்றப்பத்திரிகை தாக்கல் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகள் சிபிசிஜடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Views: - 6

0

0