கச்சத்தீவை கொடுத்தது பெரிய வரலாற்று தப்பு… இதை சொன்னால் திமுகவுக்கு கோபம் வேற வருது ; டிடிவி தினகரன் சுளீர்…!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 2:41 pm

கச்சத்தீவை தாரை வார்த்தது வரலாற்றுபிழைதானே என்றும், அதை சொன்னால் ஏன் திமுகவுக்கு கோபம் வருகின்றது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாயக்காள் என்ற பெண் உள்பட 16 வீரத்தியாகிகளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என்றழைக்கப்படும் வீரத்தியாகிகள் தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. இதில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நினைவிடத்தில் மாலை அணிவித்த அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க: சுவரில் சின்னம் வரைய அனுமதி மறுத்தால் மகளிர் உரிமைத் தொகை ரத்து… மக்களை மிரட்டும் திமுகவினர் ; இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியாதாவது :- வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த வீரத்தியாகிகளுக்கு தியாகத்தை நினைவு கூர்ந்தவர் கடந்த 2000ற்கு பின் அஞ்சலி செலுத்த வந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகின்றேன். அருணாசலபிரேசத்தில் சீனா பெயர் வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கலேயே எனக் கேட்டதற்கு, பெயர் வைப்பதால் அவர்களுக்கு சொந்தம் ஆகாது. இவங்களாக பெயர் வைத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருங்காமநல்லூர் என்னுடைய பெயர் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா..?, எனக் கூறினார்.

இந்தத் தேர்தலில் கச்சத்தீவு பற்றிய பிரச்சனையே பிரதானமாக உள்ளது எனக் கேட்டதற்கு, நேற்று கூட ஊடகநண்பர்கள் கேட்டார்கள். டெய்லி மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை ராணுவத்தினாலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு பேசி விடுதலை செய்வதும் தொடர்ச்சியாக உள்ளது. காரணம் யார் என்பது கூறுகிறார்கள். உண்மையை சொன்னால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது.

74ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் தமிழக முதல்வர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத போது, அவருக்கு அப்ரூவல் கொடுத்தார். அது வரலாற்றுப் பிழை. மீன்பிடிக்க முடியாமல் தினமும் ஜெயிலில் அடைக்கப்பட்டு கைது பண்ணி வருகின்றனர். உண்மையைச் சொன்னால் ஏன் கோபம் வருகின்றது. கச்சத்தீவு மீட்கப்படும் என பிரதமர் மோடியின் தெரிவித்துள்ளார், எனக் கூறினார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?