சுவரில் சின்னம் வரைய அனுமதி மறுத்தால் மகளிர் உரிமைத் தொகை ரத்து… மக்களை மிரட்டும் திமுகவினர் ; இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
3 ஏப்ரல் 2024, 2:26 மணி
Quick Share

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலமுறை அழுத்தம் கொடுத்ததால் தான் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தடையில்லா காவிரி நீர், சாலை வசதி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை என பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் எடப்பாடியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கியவர் ஜெயலிலதா.. அவர்களை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்க : கேபி முனுசாமி பிரச்சாரம்!

மேலும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியின் அலைதான் வீசுவதாக தெரிவித்த அவர், 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், திமுக, ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தில்லுமுல்லு செய்து வாக்குகளை பெற முயற்சிப்பார்கள்; அதை முறியடித்து அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே 100 ஏரி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டு விட்டதாகவும், இதை நிறைவேற்றி இருந்தால் மேட்டூர் அணை உபரிநீரை ஏரிகளில் நிரப்பி தற்போது வறட்சி காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம், என்றார்.

மேலும் படிக்க: தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ஒரே மேடையில் ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் : எந்த தொகுதியில் தெரியுமா?

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பலமுறை அழுத்தம் கொடுத்ததால்தான், மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கியதாகவும், இதற்கு காரணமாக இருந்தது அதிமுகதான் எனவும் தெரிவித்தார். சுவரில் சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமை தொகையை யாராவது நிறுத்தினால் நான் சும்மா விடமாட்டேன் என சாடினார்.

மேலும், கடந்த தேர்தலில் கவர்ச்சிகரமான 520 வாக்குறுதிகளை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக அரசு கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை மட்டுமே நிறுத்தி உள்ளார்கள்; அரசியல் கால்புணர்ச்சி காரணமாக அதிமுக எந்த திட்டத்தையும் நிறுத்தியது இல்லை, என்றார்.

மேலும் சேலம், கோவை, கரூர் என பல இடங்களில் அதிமுகவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான் இப்போது அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவதாக தெரிவித்த அவர், அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும், அதிலும் சேலத்தில் அதிமுகவின் வெற்றி சரித்திர வெற்றியாக இருக்க வேண்டும், என்றார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 216

    0

    0