தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ஒரே மேடையில் ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் : எந்த தொகுதியில் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 1:27 pm
rahul stalin
Quick Share

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ஒரே மேடையில் ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் : எந்த தொகுதியில் தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருகை தருகின்றனர்.

அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வரும் 12-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் ராகுல் காந்தி, நெல்லை மற்றும் கோவையில் பிரசாரம் செய்கிறார். கோவையில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை.

Views: - 100

0

0