காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தமாட்டாது : ஓபிஎஸ் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2021, 9:30 am
Ops -Updatenews360
Quick Share

சென்னை : காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தபட மாட்டாது என பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து அதிமுக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடை தரும் இதுவே நல்ல ஆட்சி என்றும் 2023க்குள் தமிழகம் முழுவதும கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆணுக்கு பெண் நிகர் என்ற நிலையை பெரியாருக்கு பின் செய்தவர் ஜெயலலிதா என்றும் 2006ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் மைனாரிட்டி திமுக இருந்த போது தமிழகம் இருளில் இருந்து தத்தளித்தது. அதன் பின் வந்த ஜெயலலிதா ஆட்சியில் மின் தட்டுப்படே இல்லாமல் மாற்றினார்.

இயற்கை சீற்றங்களில் நிவாரணம் தரும் ஆட்சி அதிமுக ஆட்சி என்றும் கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்று பிரதமரே பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுக இருந்த போது தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரித்து கொல்லப்பட்டனர். அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.

10 ஆண்டுகளாக கறை சொல்ல முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும், 2016ல் ஆண்ட கட்சி மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.3வது முறையாக ஆட்சி அமைப்போம் என்று உறுதியளித்தார்.

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தமாட்டாது என தெரிவித்த ஓபிஎஸ், மக்கள் விரும்பாத எந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தமாட்டாது என கூறினார்.

Views: - 127

0

0