பிறந்தநாளில் பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை – அவரது கணவரிடம் தீவிர விசாரனை..!

Author: Rajesh
13 May 2022, 5:45 pm

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஹானா முழுநேர மாடலாகவும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்தார். இவர் கோழிக்கோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சஹானா தனது 21-வது பிறந்தநாளன்று, தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவருடன் வசித்து வந்த சஹானாவின் பரிதாப மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சஹானாவின் மரணம் குறித்து விசாரிக்க, சஜ்ஜத்தை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மகளின் முடிவு குறித்து சஹானாவின் தாயார் கூறுகையில் ‘என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவாள். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். தனது பிறந்தநாளை கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்தார்’ என்றார்.

மாடலும் நடிகையுமான சஹானாவின் இந்த முடிவு கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?