பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரி சிறை பிடிப்பு..

3 November 2020, 1:54 pm
Quick Share

கோவை: கேரளாவிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வந்து கோவையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேராளாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, போத்தனூர் சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து சொந்தமான குப்பை கிடங்கில் இரவு 10 மணியளவில் குப்பைகளை கொண்டியுள்ளது. அப்போது அவ்வாழியாக வந்த விவசாயி ஒருவர் இது ஊர் பொதுமக்களுக்கு தகவல் அளித்தார்.

அங்கு வந்த பொதுமக்கள் கழிவுகளை கொண்டுவதை தடுத்து நிறுத்தி லாரியை சிறை பிடித்தனர். பொதுமக்களை பார்த்ததும் லாரியில் வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவர்களை விசாரித்த போது இருவரும் கேரளாவை சேர்ந்த அஸ்கர்அலி மற்றும் அப்துல் முஜீப் என்பது தெரியவந்தது, மேலும் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்து கோவையில் கொட்டிச்செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து லாரி உரிமையாளர் மற்றும் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாயத்து அதிகாரிகள் விசாரித்த பிறகு சட்ட விரேதமாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி மற்றும் ஓட்டுநரை செட்டிபாளையம் போலிஸில் ஒப்படைக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Views: - 330

0

0

1 thought on “பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரி சிறை பிடிப்பு..

Comments are closed.