கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

Author: Rajesh
23 April 2022, 12:57 pm
Quick Share

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவை கேஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலையம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் சென்ற போலீசார் திருமலையம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையம்பாளையம் சந்திப்பில் இருந்த பேக்கரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அந்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நந்து கிருஷ்ணா (22) திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அனுராக் (22) மற்றும் அதுல் (21) என்பதும், மூவரும் கடந்த இரண்டு மாதங்களாக திருமலையம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 662

0

0