பாகுபலியை கிட்ட கூட நெருங்க முடியாத கே.ஜி.எப்.-2 : ஓப்பனிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பினிஷிங் சரியில்லையே…!

Author: Rajesh
23 April 2022, 1:29 pm
Quick Share

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த கே.ஜி.எப் -2 திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. இந்தியா முழுவதும் ராக்கி பாய்யின் வருகையை சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி வெளியாகிய முதல் நாளே ரசிகர்களின் பேராதரவை பெற்றது கேஜிஎப்-2.

ஓபனிங்கில் கே.ஜி.எப் சேப்டர் 2 காட்டிய வேகத்துக்கு பாகுபலி 2-வை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்றே தற்போது தெரிகிறது. தற்போது வரை கேஜிஎப் சேப்டர் 2 எட்டு தினங்களில் 268.63 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தி சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் வரிசையில் கே.ஜி.எப்.13-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பாகுபலி 2 இந்த வரிசையில் ரூ.511 கோடிகள் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் பார்த்தால் 10 வது இடத்துக்கு முன்னேறிவிடும்.

பாகுபலி 2 படத்துக்கு பெண்கள், குழந்தைகள் என குடும்ப ஆடியன்ஸ் பெருமளவில் வந்தனர். இரண்டு வாரங்களுக்கு மேல் திரையரங்கில் அந்தப் படத்தை நிலைநிறுத்தியது இவர்கள்தான். ஆனால், கேஜிஎப் சேப்டர் 2 படத்தை அதிகமும் இளைஞர்களே பார்க்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனால், இந்த வார இறுதிக்குப் பிறகு கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் வசூல் கணிசமாகக் குறையும், அடுத்த வார இறுதிக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுவதும் முடிந்து விடும். அதனால் கே.ஜி.எப்.-2 வால் ஒருபோதும் பாகுபலியை தொட நெருங்க முடியாது என தெளிவாகத் தெரிகிறது.

Views: - 735

2

1