கொரோனா நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை : ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்!!

9 May 2021, 12:47 pm
CM Cabinet Meet - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரா பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

நாளை மறுநாள் சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது.

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில், நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 108

0

0