வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு வாய் திறக்காத திமுக அரசுக்கு கண்டனம் : அதிமுக நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள்!!

9 July 2021, 8:32 pm
Admk Resolution- Updatenews360
Quick Share

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒரு மனதாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம்‌ – 1

தமிழகத்தின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான உரிமை காப்பீர். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுப்பீர் என தமிழக அரசை வலியுறுத்தல்

தீர்மானம் – 2

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக. மக்கள் படும் துயரங்களை மனதிற்கொள்க என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை.

தீர்மானம் – 3

பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளை குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற் வேண்டும்.

தீர்மானம் – 4

சட்டமன்ற பொதுத்தேர்தலின் வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய்திறக்காத திமுக அரசுக்கு கண்டனம். வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்.

தீர்மானம் – 5

தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

தீர்மானம் – 6

விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்கு காரணமான தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்.

Views: - 169

0

0