பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பேச்சு கொடுத்து கடத்திக் கொலை : 4 பேர் கொண்ட கும்பலை தேடும் புதுச்சேரி போலீசார்!!

19 November 2020, 12:39 pm
Pondy Murder - Updatenews360
Quick Share

புதுச்சேரி : முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 25) இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் செய்து வந்தார். இதனிடையே நேற்று பிரகாஷ் இரவுப் பணியில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் நள்ளிரவில் வந்த 4பேர் கொண்ட கும்பல் பிரகஷை வலுகட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் பொறையூர் பகுதிக்கு கொண்டு சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

பிரகாஷை முன்விரோதம் காரணமாக சபரி, எலி கார்த்திக், டெம்போ ராஜா மார்த்தான் கொலை செய்து இருப்பதாக போலீசாரின் முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

Views: - 0

0

0