தனியறையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்த பின்னலாடை நிறுவனம் : திருப்பூரில் பரபரப்பு!!

18 April 2021, 3:41 pm
Tirupur North Workers - Updatenews360
Quick Share

திருப்பூர் : தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்களை சொந்த ஊர் செல்ல அனுமதிக்காமல் தனி அறையில் பூட்டிவைத்ததாக வந்த புகாரை அடுத்து 19 பெண்களை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர்

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பயிற்சிக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி உள்ளனர் . இதில் சிலர் கடந்த மாதம் தங்களது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் மீதமுள்ள தொழிலாளர்களும் கொரோனா ஊரடங்கு குறித்த அச்சன் காரணமாக சொந்த ஊர் செல்ல முயன்றபோது பின்னலாடை நிறுவனத்தினர் அவர்களை சொந்த ஊர் செல்ல அனுமதிக்காமல் அவர்களது செல்போனை பறித்துக்கொண்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் புகார் அளித்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அந்த புகார் கொண்டு வரப்பட்டது.

இதனால் சமூக நலத் துறை , வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் பின்னலடை நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் 19 பெண்கள் தனி அறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Views: - 68

0

0