இளவரசியை பார்க்க ரெடியா? நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. வியாபாரிகள் மகிழ்ச்சி!!

4 July 2021, 5:16 pm
Kodai Tourist Allow - Updatenews360
Quick Share

கொடைக்கானல் : கொரோனா விதிமுறைக‌ளை பின்பற்றி கொடைக்கான‌லில் தோட்ட‌க்க‌லைதுறைக்கு சொந்த‌மான‌ பிரைய‌ண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நாளை முத‌ல் சுற்றுலாப்ப‌யணிக‌ள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

த‌மிழக‌த்தில் கொரோனா இரண்டாம் அலையின் கார‌ண‌மாக‌ த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு க‌ட்டுபாடுக‌ள் விதிக்க‌ப்ப‌ட்டது. தொட‌ர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்த‌ நிலையில் ப‌ல்வேறு த‌ள‌ர்வுக‌ள் அறிவித்தும் இபாஸ் ம‌ற்றும் இ ரிஜிஸ்ட்டேச‌ன் முறைக‌ளை நீக்க‌ம் செய்து த‌மிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌விட்டிருந்த‌து.

இத‌னை தொட‌ர்ந்து சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை ந‌ம்பியே இருந்த‌ கொடைக்கான‌லில் கொரோனா விதிமுறைக‌ளை பின்ப‌ற்றியும் அர‌சின் விதிமுறைக‌ளுக்கு உட்ப‌ட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட் உள்ளனர்.

முத‌ற்க‌ட்ட‌மாக‌ தோட்ட‌க்க‌லைதுறைக்கு சொந்த‌மான‌ பிரைய‌ண்ட் பூங்கா , ரோஜா பூங்கா , செட்டியார் பூங்கா உள்ளிட்ட‌வை நாளை முத‌ல் சுற்றுலாப்ப‌யணிக‌ள் கண்டு க‌ழிக்க‌ அனும‌திக்க‌ப்ப‌டும் என‌ தோட்ட‌க்க‌லை துறை இணை இய‌க்குன‌ர் சீனிவாச‌ன் த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளார். இத‌னால் கொடைக்கான‌ல் ம‌க்க‌ள் ச‌ற்று நிம்ம‌தி அடைந்துள்ள‌ன‌ர்.

Views: - 173

0

0