கொடைக்கானலில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற அறிவிப்பு வாபஸ் : மனம் மாறிய சுகாதாரத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 7:47 pm
Kodaikanal Vapas-Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு முதல் தவணை தடுப்பூசி போட்டு சான்றிதழ் காட்டிய பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இந்த நடைமுறை பின் வாங்கப்பட்டது..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் படை எடுத்தனர் மேலும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர் சதுக்கம், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர் .

மேலும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்லக் கூடியதாக இருக்கக் கூடிய அப்சர்வேட்டரி பகுதியில் சிறிது நேரம் சிறிது நேரம் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் வந்திருக்கக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் கொரோனா முதல் தவணை தடுப்பூசி சான்றிதழ் கேட்டனர்.

சான்றிதழ் காண்பிக்காத ஒரு சில வாகனங்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டது மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. ஒரு சில மணி நேரங்களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டு அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா தளங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் தடுப்பு ஊசி செலுத்தி சுற்றுலா வருவதற்கு அறிவுரையும் கூறப்பட்டு வருகிறது.

Views: - 270

1

0