சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : விசாரணை வளையத்தில் சிக்கிய பிரபல தொழிலதிபர்.. 3வது நாளாக கிடுக்குப்பிடி!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 1:24 pm

கோடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் மூன்றாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. கடந்த இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று விசாரணை தொடங்கியது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று சென்னை கோவை உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது வரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியமாக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, சசிகலா உறவினர் விவேக், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா, மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரர் சிபி, அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பிஜின் சகோதரர் மோசஸ், மேலும் மர வியாபாரி சஜீவன் சகோதரர் சுனில் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

தற்போது செந்தில்குமார் என்பவரிடம் மூன்றாவது நாளாக தனிப்படை போலீசார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலிசார் கோட நாடு பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

நேற்று செந்தில்குமாரிடம் 7 மணி நேரமும், அவுருடைய தந்தை ஆறுமுக சாமியிடம் 4 மணி நேரமும் தனித்தனியாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 3வது நாளாக செந்தில்குமார் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!