பிரதமர் ஒருபோதும் இதனை அனுமதிக்க மாட்டார்… பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஏன்..? வெளிப்படையாக சொன்ன கேபி முனுசாமி!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 11:27 am

மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளிடம் கேபி முனுசாமி பேசியதாவது:- ஸ்டெர்லைட் ஆலை மூடல் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதை உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஒரு தலைவர் பொதுவெளியில் இது போன்ற கருத்துக்கள் சொல்வது அவருக்கே அழகு இல்லை. காரணம் ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகள், கோரிக்கைகளை ஏற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்படி செயல்பட்டு கொண்டிருக்கக் கூடிய முடிந்த நிகழ்வை இது போன்ற கருத்துக்கள் சொல்வது வேதனை அளிக்கிறது.

இந்திய திருநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார். இப்படி உள்ள ஒரு காலகட்டத்தில் அந்நிய நாட்டு பணங்கள் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார். அப்படி வந்தால் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பார். இது போல், அந்நிய சக்திகள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் உள்ள அரசு இயந்திரங்கள், அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள், என்றார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது என்பது நிராகரிக்கப்பட்டது என்பது பொருள் என ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு, அது ஆளுனர் அவருடைய கருத்து. அவர் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. சொல்லியிருக்கிறார். தகவல் சொல்லும் கருத்துக்களுக்கு நான் விமர்சனம் சொல்வது சரியாக இருக்காது. ஆளுநரை இந்த விஷயத்தில் உணர்ந்து ஈர்ப்புத்தன்மையை தெரிந்து கொண்டு நடந்து கொள்வார் என நம்புகிறேன்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து பொதுச் செயலாளர் முடிவு எடுத்தார். நாளை சென்னை வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருந்தால் அதிமுக பொதுச் செயலாளர் சந்திப்பார். அதிமுகவின் செயல்பாடுகள் நாட்டின் செயல்பாடுகள் குறித்து இரு தலைவர்கள் பேசுவார்கள். என்ன பேசுவார்கள் என என்னால் சொல்ல முடியாது, எனக் கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி கொடுத்த கேள்விக்கு, நாடு பெரியது நாட்டுக்குள் இருக்கின்ற இயக்கங்கள் பல்வேறு கொள்கைகள், சிந்தாந்தம் கொண்டுள்ளது. அப்படி உள்ள இயக்கங்களாக இருந்தாலும் பல்வேறு சிந்தாதங்கள் இருக்கின்ற போது, வலது, இடது என பல்வேறு இயக்கங்கள் உள்ளன. அப்படி கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிகள் அமையும். அதன் அடிப்படையில் தேசிய கட்சி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!