பச்சை மண்டலத்தை நாசம் செய்த கொரோனா : கிருஷ்ணகிரியில் பாதிப்பு 4ஆக உயர்வு!

6 May 2020, 11:24 am
Kvp Corona TEst - Udpatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சூளகிரி பகுதியை சேர்ந்த 52 வயது மற்றும் 60 வயதுள்ள இரு பெண்களுக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி இவர்கள் பெங்களூர் சென்று திரும்பியதாகவும், அறிகுறி காட்டாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இரு பெண்களும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பசுமை மண்டலம் என்ற அந்தஸ்திலிருந்து, ஆரஞ்சு மண்டலம் என்ற நிலைக்கு போயுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்.

இந்த நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று பாதிப்பு 2ல் இருந்து 4ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து கடந்த 2ம் தேதி ஓசூர் வந்த மூன்று பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இளைஞர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஓசூர், மத்திகிரி பகுதியை சுற்றி 7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.