ஓடிக் கொண்டிருந்த லாரியில் திடீர் தீ..!! சிலிண்டர் வெடித்ததால் 2 பேர் படுகாயம்..!!

19 March 2020, 2:12 pm
Krishnagirir Fire - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 8 பைக், ஒரு ஆட்டோ, ஒரு ஈச்சர் வேன்,கடை எரிந்து நாசடானது. ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தத்தில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி எரிவாயு கசிவு காரணமாக திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்தஓசூர் மாநகர தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 3 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஒரு ஆண். மற்றும் பெண் என இருவருக்கு தீ காயம் ஏற்பட்டது. மேலும் அருகிலிருந்த கோழிக்கடை கோழிகளும் கடையும் முற்றிலும் எரிந்து தீக்கிரையாயின. மேலும் அருகில் இருந்த 8 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ மற்றும் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் எரிந்து நாசமானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஓசூர் அட்கோ காவல் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.