கேரளாவில் குமரி மீனவர்கள் கைது : கடல் அட்டை கடத்த முயன்றதாக வழக்கு!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2021, 4:12 pm
Kumari Fishers Arrest - Updatenews360
Quick Share

கேரளா : லட்ச தீவில் இருந்து கொச்சிக்கு கடல் அட்டை கடத்த முயன்றதாக குமரி மீனவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரூபன் என்பவரது விசை படகில் குறும்பனை பகுதியை சேர்ந்த ஜூலியஸ் மற்றும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சாஜின் ஆகியோர் லட்ச தீவு பகுதியில் இருந்து மீன்கள் எடுத்து தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லட்ச தீவு பகுதியில் இருந்து கடல் அட்டை கடத்தியதாக இருவர் உட்பட லட்ச தீவு மற்றும் வட இந்தியாவை சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர். இரு விசை படகையும் பறிமுதல் செய்த கடல் வாழ் உயிரின பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 64

0

0