செம்மொழி நாயகரே… டார் டாரான பேனர் : பாபநாசத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 11:28 am
banner damage - updatenews360
Quick Share

கும்பகோணம் : பாபநாசம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம் அருகே பண்டாரவடை கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் தஞ்சை – கும்பகோணம் மெயின் ரோட்டில் பாபநாசம் அரசு மருத்துவமனையை மதில் சுவர் ஓரம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இதனை மர்ம நபர்கள் கிழித்து ஏறிந்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கிழிந்த பேனரை அகற்றியும், சில இடங்களில் மீண்டும் ஒட்டியும் வைத்துள்ளனர். கருணாநிதியின் நினைவுநாளையொட்டி திமுகவினர் வைத்த பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 575

0

0