பாகுபலியை அடக்க வந்த கும்கி யானைகள் : பாதுகாப்பு குறித்து வனப்பாதுகாவலர்கள் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 6:24 pm
Kumki Inspection - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்துக்கு வந்த கும்கி யானைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த உதவி வனப்பாதுகாவலர்கள் யானையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு,மனிதர்களையும் பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை அச்சுறுத்தி வந்தது.

இதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கும்கி யானைகளை உதவி வனப்பாதுகாவலர்கள் செந்தில்குமார், தினேஷ்குமார் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பாகன்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும்,மழை வர உள்ளதால் யானையினை பாதுகாக்க தார்ப்பாலின் ஷீட்களை பயன்படுத்துமாறும் காட்டு யானைகள் ஊடுருவலை தடுக்க மின்விளக்குகளை பொருத்துமாறும் கேட்டுக்கொண்டனர். ஆய்வின் போது பாகன்கள் வனத்துறையினர் பலர் உடனிருந்தனர்

Views: - 221

0

0