பாகுபலியை அடக்க வந்தது கலீம் : காட்டுயானை மீது ரேடியோ காலர் பொருத்த கும்கி யானைகள் வருகை!!

23 June 2021, 8:42 am
Bahubali Elephant- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் நடமாடும் பாகுபலி காட்டுயானை மீது ரேடியோ காலர் பொறுத்த 3 கும்கியானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் சிறுத்தை, காட்டுயானை, குரங்கு, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக போதிய மழை பொழியாததால் வனத்தில் வனவிலங்குகளுக்கு போதிய அளவில் உணவு, குடிநீர் கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் வனத்தை விட்டு வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி விளை நிலங்கள், குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதில் தற்போது மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஓடந்துறை, சமயபுரம், வெள்ளிப்பாளையம், ஊமப்பாளையம், வேடர்காலணி உள்ளிட்ட பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை காட்டுயானை அடிக்கடி குடியிருப்பு, விளை நிலங்களில் நடமாடி வருகிறது.

இதனால் இதுவரை மனித மோதல் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பாகுபலி யானை ஊமப்பாளையம் வழியாக இரவு நேரங்களில் பவானி ஆற்றை கடந்து வெள்ளிப்பாளையம் பகுதியில் நடமாடி வருகிறது.

இதனிடையே வனத்துறை அதிகாரிகள் பாகுபலி யானை மீது ரேடியோ காலர் பொறுத்தி யானையை கண்காணிக்க முடிவு செய்தனர். இதனிடையே பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாகுபலி மீது ரேடியோ காலர் பொறுத்தப்பட உள்ளது.

இதனால் செவ்வாய்கிழமை முதல் அடுத்தடுத்து 3 கும்கியானைகள் மேட்டுபாளையத்திற்கு வரர உள்ளன. இதற்கான பணிகளை மேட்டுப்பாளையம் வனச்சரகர் பழனிராஜா தலைமையில் நடக்க உள்ளது.

Views: - 204

0

0