‘பாய் பிரண்ட்’ சிக்காவோடு சிக்கிய விவகாரம் : ஜாமீனில் வெளிவர முடியாதபடி மீண்டும் ரவுடி பேபி சூர்யா மீது குண்டாஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 8:05 pm
Rowdy Baby Surya -Updatenews360
Quick Share

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா,வை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி,என்ற ரவுடி பேபி சூர்யா (வயது 35). திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும், ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.

வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கையாக வந்துள்ளது.

இவரது நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மதுரையில் இருந்த இருவரையும் கடந்த மாதம் 4ஆம் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா, மீது தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே சில இடங்களில் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.

இந்த விபரங்களை சேகரித்து வந்த போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரைபடி ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 374

0

0