மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் குற்றப் பரம்பரை..? சாதி மோதலை தூண்டி விடுகிறாரா பிரபல நடிகர்.?

Author: Rajesh
10 May 2022, 3:06 pm
Quick Share

பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ என்னும் நாவலை, படமாக்க, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே பணி போர் ஏற்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

அந்த தொடரை திரைப்படமாக்க தனக்குதான் உரிமை இருக்கிறது என பாரதிராஜா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கூறினார். அதேபோல்இ பாலாவும் தனக்கு மட்டுமே அதன் மீது உரிமை இருக்கிறது என தெரிவித்தார். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, இருவரும் நேரடியாகவே விமர்சித்துக் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான எம்.சசிகுமார் ‘குற்றப்பரம்பரை’ நாவலை வெப் சீரிஸாக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த இணையத்தொடரை தயாரிக்கிறார் என்றும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், பாரதிராஜா மற்றும் பாலா தரப்பு அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக, ‘குற்றப்பரம்பரை’-யை படமாக எடுக்கும் முயற்சியை அவ்வளவு சீக்கிரமாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பார்களா என்பது சந்தேகமே. அதுவும் இந்த தொடரை இயக்கப் போகும் சசிக்குமார் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த தொடர் வெப் சீரிஸாக வருமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 884

2

0