கூட இருந்தே குழி பறித்த திமுக : நிலத்தை ஆக்கிரமித்து தோழமை கட்சி பிரமுகரின் தோளை உரித்த கும்பல்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 3:27 pm
Land Prob - Updatenews360
Quick Share

கரூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் நிலத்தினையே ஆக்கிரமித்த திமுகவினர் விசிக பிரமுகரை 40 பேர் கொண்ட குண்டர்களால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கரூர் அடுத்த வெங்கக்கல்பட்டி பகுதியில் வசிப்பவர் மரியாயி, இவர் கடந்த 2008 ம் ஆண்டு உடல்நிலை மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மரியாயிக்கு சொந்தமான நிலத்தை இவரது மகள்கள் முத்துலெட்சுமி, சரோஜா, கோவிந்தம்மாள் ஆகிய மூன்று பேரும் வாரிசு தாரர்களாக அனுபவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் கரூரை சார்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் என்பவர், அந்த நிலத்தில் கல் ஊன்ற வரும் போது, நிலத்தின் உரிமையாளர்களான முத்துலெட்சுமி, சரோஜா, கோவிந்தம்மாள் ஆகிய மூன்று பேரும் இது எங்களுக்கு சொந்தமான நிலம் கடந்த 20 வருடங்களாக நாங்கள் தான் விவசாயம் செய்து வருகின்றோம் என்று கூறியுள்ளனர்.

அவர், கல் ஊன்றுவதை விட்டு விட்டு உடனடியாக அந்த இடத்தினை விட்டு வெளியேறினார். ஆனால், இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் எங்கள் நிலத்தில் கல் ஊன்ற வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி கரூர் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு, காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட துறைகளில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன் விசாரணை துவக்க வில்லை, இந்நிலையில், நேற்று மாலை, திமுக நிர்வாகியான தாந்தோன்றி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர் என்கின்ற ரகுநாதன் என்பவர், இவரது குடும்பங்களுக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் எனது பைனான்ஸ் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று மிரட்டல் தோனியில் பேசியுள்ளார்.

இதனையடுத்து, சரோஜா என்கின்ற பெண்மணியின் மூத்த மகன் செல்வம் என்பவர் அந்த செல்பேசியை கேட்டு நான் எதற்கு வரவேண்டும், எங்கள் இடத்திற்கு நாங்கள் எதற்கு பைசல் பேச வரவேண்டுமென்று கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனையடுத்து திமுக நிர்வாகி தாந்தோன்றி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர் என்கின்ற ரகுநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஜெகதாபி கார்த்திக், சி.கே.ராஜா, பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் கூலிப்படைகள் சுமார் 40 க்கும் மேற்பட்டோருடன் விவகாரமான அந்த நிலத்தில் வேலி அமைத்தனர்.

அப்போது சரோஜா என்கின்ற பெண்மணி அங்கு கட்டியிருந்த ஆடு, மாடுகளுக்கு தீவனம் வைக்க போகும் போது, பெண்மணியினை அந்த குண்டர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில்,. இதையறிந்த சரோஜா என்பவரின் மூத்த மகன் செல்வம், இளைய மகன் ராஜா ஆகியோர் தட்டிக்கேட்கும் போது திமுக ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.தான் இங்கு கம்பிவேலி போட சொன்னார் என்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும், அடிக்க முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள், தாந்தோன்றிமலை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தவுடன், காவலர்கள் அங்கே குவிந்த நிலையில் அந்த குண்டர்கள் உடனே வாகனங்களை எடுத்து கொண்டு ஒடியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் முத்துலெட்சுமியும், சரோஜா ஆகிய இருவரும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளனர். அதில் திமுக பிரமுகர்கள் எங்கள் நிலத்தினை பைசல் பேசி தீர்த்து விடுவதாக ஏற்கனவே கூறிய நிலையில், அடியாட்கள் கொண்டு எங்கள் நிலத்தினை அபகரிக்க முற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட சரோஜா என்பவரது இளைய மகன் ராஜா என்கின்ற மன்னன் வழக்கறிஞர் என்பதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 318

0

0