”நிலத்தின் சர்வயேர் நம்பர் மாத்தணும்னா பணத்த வெட்டு” : ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 7:57 pm

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டி இடம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?