கொடைக்கானல் அருகே வத்தலகுண்டு சாலையில் மண்சரிவு… சாலை பாதி பெயர்ந்து வந்ததால் அச்சம் : வாகன ஓட்டிகள் செல்லத் தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 2:07 pm

கொடைக்கானல் தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தடுப்பு சுவர்கள் இடிந்து சாலை சரிந்து போக்குவரத்து பாதிப்பு, வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல் துறை தடை விதித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கன மழையானது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

இதனையடுத்து கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பட்டலங்காடு என்ற இடத்தில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து, சாலை சரிந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் காவல் துறையினர் அனுமதித்து வாகனங்கள் செல்வதற்கு தாண்டிக்குடி காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் சரிந்துள்ள சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கானல்காடு கிராமத்தில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?