இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு : 3 பேருக்கு ஜாமீன்!!

Author: Udayachandran
7 October 2020, 7:14 pm
Angoda lokka- Updatenews360
Quick Share

கோவை : இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கொட லொக்கா உடலை போலி ஆவணங்கள் மூலம் எரித்தது தொடர்பாக கைதான இலங்கையை சேர்ந்த அம்மானி தாஞ்சி, தியானேஸ்வரன், பெண் வழகறிஞர் சிவகாம சுந்தரி ஆகிய 3 பேருக்கு ஜாமீன் வழங்கங்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சிபிசிஐடி சார்பில் குற்றபத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தோத்திர மேரி 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு வழஙகியிருக்கின்றார்.

மர்மமான முறையில் உயிரிழந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் மரணம் இயற்கைக்குப் புறம்பானது அல்ல என்று உடற்கூறு ஆய்வு தெரிவித்ததன் அடிப்படையில் இதற்கு முன்பாக ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீன் வழங்கினர். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் துரிதபடுத்தியுள்ளனர்.

Views: - 52

0

0