கோவையில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கம்..!

25 August 2020, 5:52 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி ஆணையர் இன்று துவக்கி வைத்தார்.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இங்கு மருத்துவ பரிசோதனைகள் குறைவாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 100 வார்டுகளிலும் தினந்தோறும் மருத்துவ முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் நடத்தி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடமாடும் மருத்துவமனை பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 34

0

0