காலையில் கோர்ட் வாசல்.. மாலையில் சட்டக்கல்லூரி மாணவர்.. நெல்லையில் ஒரேநாளில் இரு கொலைகள்!

Author: Hariharasudhan
21 December 2024, 9:53 am

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் வழிமறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை, கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து உள்ளார். பின்னர், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

பின்னர், இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.

Law student killed in Cheranmahadevi Nellai

பின்னர், இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார், விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக, கடந்த ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்ராங்குளம் பகுதியில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற கொலைக்கு, பழிக்குப் பழியாக சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி கொன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மாயாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபரிடம் ஆசை காட்டி ரூ.1.70 கோடி மோசடி : கணவரை சிக்க வைத்து எஸ்கேப் ஆன மனைவி !

முன்னதாக, நேற்று காலை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாசல் முன்பு மாயாண்டி என்ற இளைஞர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்தக் கொலையும் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!