சோளக்காட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை : தேடுதல் வேட்டைக்கு சென்ற வனத்துறை வீரரை தாக்கியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 7:15 pm

திருப்பூர் : அவிநாசி அருகே சோளக்காட்டிற்குள் சிறுத்தை உள்ளதை அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை வீரர் காயமடைந்தார்.

கோவையிலிருந்து வந்த சிறப்பு வனத்துறை வீரர்கள் கவச உடை அணிந்து சிறுத்தை இருப்பதாக சந்தேகப்படும் புதருக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மசால் புல் பயிரிட்டுள்ள தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை சத்தமிட்டு தாக்கியது. இதில் வனத்துறை வீரர் மணிகண்டனுக்கு லேசான நகக் கீறல் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சிகிச்சைக்கு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுத்தை தாக்க முற்பட்டதால் வனத்துறை வீரர்கள் பதறியடித்து வெளியேறினர். சிறுத்தை இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!