தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை: 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிரிழப்பு

15 July 2021, 1:36 pm
Quick Share

நீலகிரி: உதகையில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைகாலமாக வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர் என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின் சிறுத்தையானது பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் உயிரிழந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.

Views: - 68

0

0