குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை ருசி பார்த்த சிறுத்தை : சிக்கித் தவிக்கும் சிக்கரசம்பாளையம் கிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 10:40 am

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை வேட்டையாடி கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் விவசாயி முருகன் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.

மேய்ச்சலுக்காக தோட்டத்திற்குள் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றார். இன்று அதிகாலை சென்று பார்த்த பொழுது 5 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


அனைத்து ஆடுகளின் கழுத்துப்பகுதியில் கடிபட்ட நிலையில் ரத்தம் உறிஞ்சப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் வந்து ஆய்வு செய்த போது சிறுத்தை தான் ஆடுகளை வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.

குடியிருப்புகள் நிறைந்த சிக்கரசம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தில் சிறுத்தை புகுந்தது வேட்டையாடியதில் 8 ஆடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களால் கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!