“கைலாசாவில் கால்பதிக்க தொடர்ந்து விருப்பம் தெரிவிக்கும் தமிழர்கள்” – ஹோட்டல் அதிபரை தொடர்ந்து நித்திக்கு விவசாயி கடிதம்..!

26 August 2020, 6:36 pm
Quick Share

உணவகத்தை தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கோரி நித்தியானந்தாவிற்கு மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தி நித்யானந்தா கடந்த விநாயகர் சதுரத்தியன்று கைலாசா நாட்டின் கரன்சிகளை வெளியிட்டார். இப்படி தொடர்ந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதுகுறித்து இணைய நேரலையில் பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த சூழலில், இன்று மதுரையை சேர்ந்த விவசாயி பாண்டிதுரை என்பவர் கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி கோரி நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இது குறித்து நித்தி மீண்டும் ஒரு நேரலையில் தோன்றி தகவல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0