சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை:மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

8 July 2021, 2:56 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் அருகே பெற்ற மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி அரியலூர் மகிளா நீதிமன்றம் ஆயுள் சிறை என தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ளே பாகல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருக்கு திருமணம் ஆகி 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சவுக்கு தோப்பிற்கு ஆடு மேய்க்க சென்ற தன்னுடைய 15 வயதுடைய மூன்றாவது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பிறகு பலமுறை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு மாதவிடாய் வராத காரணத்தால் மருத்துவரிடம் சென்றபோது 3 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து 2018 மார்ச் மாதம் 28 ஆம் தேதி சிறுமியிடம் புகார் வாங்கிய ஜெயங்கொண்டம் மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இதுகுறித்து அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை சிவலிங்கத்திற்கு இன்று ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்பளித்தார்.

Views: - 165

0

0