காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின மக்கள் : விழுப்புரம் அருகே நடந்த கொடூர சம்பவம்!!

15 May 2021, 1:41 pm
Low Caste- Updatenews360
Quick Share

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் என்கின்ற கிராமத்தில் பட்டியல் சமூக மக்களை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எடுத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர்.

அதன்படியே அந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமால் சந்தானம் ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கியுள்ளனர்.

இது தொடர்பான படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பட்டியல் சமூக மக்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க கோரி ஊர் மக்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 233

0

0