இரவில் லோடுமேன்…பகலில் கவுன்சிலர் வேட்பாளர்: ஒயிட்&ஒயிட்டில் படுஜோராக வாக்கு சேகரிக்கும் மானமதுரை அதிமுக வேட்பாளர்..!!

Author: Rajesh
8 February 2022, 4:47 pm
Quick Share

சிவகங்கை: மானாமதுரையில் லோடுமேன் வேலை பார்க்கும் ஒருவர் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

மானாமதுரை 14-வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள பழனி என்பவர், இரவில் லோடுமேன் பணியையும் பகலில் தேர்தல் பணிகளையும் கவனித்து வருகிறார்.

இதன் மூலம் கட்சியில் கீழ்நிலை தொண்டனும் அடுத்தடுத்து உயரத்தை எட்ட முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தீயாய் வேலை செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் புதுமுகங்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் லோடுமேன் ஒருவர் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மானாமதுரை 14வது வார்டில் போட்டியிடும் பழனி என்பவர், இரவில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் பகலில் ஒயிட் அண்ட் ஒயிட் கெட்டப்பில் மாஸ் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.

ஓட்டுக் கேட்பதற்காக மக்களை சந்திக்கச் செல்லும் இவர், தாம் ஒரு லோடுமேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து உங்களுக்காக உழைக்க காத்திருப்பதாக உறுதியும் கொடுக்கிறார். பாரம் தூக்கும் தொழிலாளிக்கு கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட்டதன் மூலம் கட்சியில் யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கும் உயரலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் களப்பிரச்சாரத்திலும், இடைப்பட்ட நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 1257

0

0