9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்… கொரோனா நோயாளிகள் வாக்களிப்பது எப்படி..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு..!!!

Author: Babu Lakshmanan
3 September 2021, 5:32 pm
Quick Share

9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- புதியதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்ரூ, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, இராணிபேட்டை, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்‌ உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத்‌ தேர்தல்கள்‌ மற்றும்‌ 2019-ல்‌ தேர்தல்‌ நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில்‌ உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ 30.06.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள தற்செயல்‌ தேர்தலுக்கான வாக்குப்பதிவினை வாக்குப்பதிவு நாளன்று காலை 7.00 மணி முதல்‌ மாலை 7.00 மணிவரை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ நிர்ணயம்‌ செய்து 1.9.2021 அன்று ஆணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிடவும்‌, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும்‌ கூடுதல்‌ நேரம்‌ தேவைப்படுவதால்‌ மேற்படி ஆணையினை தமிழ்நாரு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டுள்ளது.

Views: - 308

0

0