லாரி கவிழ்ந்து ஷோரூம் முன்பு நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் சேதம் : பரபரப்பான வீடியோ!!
21 January 2021, 2:41 pmQuick Share
கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே அதிவேகமாக சென்ற லாரி கவிழ்ந்து 4 புதிய ஆட்டோக்கள் சேதமான வீடியோ வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கள்ளியங்காடு அருகே திண்டுக்கல்லில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடிரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சாலை ஓரம் மூன்று சக்கர வாகன ஷோரூமின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 4 புதிய ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. இதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து இரணியல் போலிசார் வழக்குபதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Views: - 0
0
0