உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2025, 6:54 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கணவர் கார்த்தி பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து நஷ்டமான நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

இதனால் உறவினர்களிடம் அதிக அளவு கடன் வாங்கியதின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

lost several lakhs A young man's tragic decision

மேலும் கார்த்தியின் உடலை கைப்பற்றி லத்தேரி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?