ஊரடங்கால் குறைந்த வாகன போக்குவரத்து : திம்பம் சாலையில் படுத்துறங்கிய மலைப்பாம்பு!!

18 May 2021, 11:12 am
Python - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில், வாகன போக்குவரத்து இல்லாததால் சாலையில் படுத்துறங்கிய மலைப்பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிய வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது.

வெறிச்சோடிய திம்பம் மலைப் பாதையில் இன்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையில் படுத்து இருந்தது. அவ்வழியாக வேனில் வந்த வாகன ஓட்டி ஒருவர் சாலையில் படுத்து இருந்த மலைப் பாம்பை பார்த்து வாகனத்தை நிறுத்தினார்.

சிறிது நேரம் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு மீண்டும் வனப்பகுதிக்குள் தானாகவே சென்று மறைந்தது. இதனால் சிறிது நேரம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 151

0

0