தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சொகுசு காரில் பயங்கர தீ : ஓட்டுநர் பலியான சோகம்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 5:43 pm
திருச்சி : மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சித்தாநத்தம் அருகே ஒடும் காரில் தீ பற்றிய சம்பவத்தில் டிரைவர் உடல் எரிந்து பலியானார்.
சித்தாநத்தம் அருகே திருச்சியை நோக்கி சென்ற கார் ஒன்று சென்டர்மீடியாவில் மோதிய நிலையில் கார் தீ பற்றி எரிவதாக அந்த வழியாக சென்றவர்கள் மணப்பாறை போலீசார், மற்றும் தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரியும் தீயை அரை மணி நேரத்திற்கும் மேலாக எரிந்துகொண்டிருந்த காரை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
காரின் தீயை அணைத்தபின்பு காருக்கு அருகே சென்ற தீயணைப்பு துறையினர் காரில் டிரைவர் சீட்டில் டிரைவர் முழுவதும் எரித்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த டிரைவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணநடத்தினர்.
விசாரனையில் திருச்சி, தென்னூர் மூல கொல்லை தெருவை சேர்ந்த ராமசாமி மகன் நாராயணன்(வயது 32) கார் ஓட்டுநர் என்பதும், திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு சவாரிக்கு வந்து விட்டு மீண்டும் திருச்சியை நோக்கி சென்றதும் தெரியவந்துள்ளது.
மேலும் கார் எப்படி தீ பற்றியது காரணம் என்ன என்பது குறித்து மணப்பாறை போலீசார் மேலும் விசாரனை செய்து வருகின்றனர். திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஒடிய கார் தீபற்றி எரிந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0