சினேகன் கார் மோதிய விபத்து : சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு!!
21 November 2020, 10:11 amபுதுக்கோட்டை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியதாக சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரம் என்ற ஊரின் சாலையில் சினேகன் காரில் சென்றுள்ளார். அப்போது சவேரியார்புரத்தில் இருசக்கர வாகனம் மீது சினேகனின் கார் மோதிய விபத்தில் ஊனையூரைச்சேர்ந்த கட்டிட வரையாளர் அருண் பாண்டி என்பவர் பலத்த காயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலம்காரை ஓட்டிச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார் . காரை ஓட்டிச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும் கவிஞருமான சினேகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையல் இளைஞர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0