‘நன்றி’-னு ஒற்றை வார்தையால் சொல்ல முடியாது.. உங்கள் அன்பிற்குள் அடங்கி மகிழ்கிறேன் : ரசிகர்களுக்கு சிம்பு உருக்கமான கடிதம்

Author: Babu Lakshmanan
29 November 2021, 5:42 pm
Quick Share

சென்னை : மாநாடு வெற்றியைத் தேடிக் கொடுத்த ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

வின்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு கிடைத்த சிறந்த come back படமாக மாநாடு அமைந்துள்ளது. திரையுலகில் தனக்கு அளிக்கப்பட்ட நெருக்கடி, அழுத்தத்திற்கு மத்தியில், மாபெரும் வெற்றியை இந்தப் படம் அவருக்கு தேடிக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸில் கூட அவர் மேடையில் கண்ணீர் விட்டு கதறியது, ரசிகர்களை பெரிதும் உருக்கியது.

இந்த நிலையில், அனைத்து தரப்பு மக்களும் மாநாடு படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், மாநாடு வெற்றிக்காக நடிகர் சிம்பு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது :- இறைவன்‌ மீதும்‌ உழைப்பின்‌ மீதும்‌ நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம்‌ “மாநாடு”. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திட வேண்டும்‌ என்ற என்‌ எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

மாநாடு படம்‌ உலகம்‌ முழுக்க மிகப்‌ பெரும்‌ வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்குக்‌ காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ்‌ காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட்‌ பிரபு அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்கள்‌ மாநாடு‌ படக்குழு, என்‌ தாய்,‌ தந்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள்‌, பத்திரிகை மற்றும்‌ ஊடக நண்டர்கள்‌. என்‌ ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும்‌, உலகெங்கிலும்‌ உள்ள அனைத்து மக்களுக்கும்‌ மிகப்‌ பெரிய நன்றிக்‌ கடன்பட்டுள்ளேன்‌.

நன்றி என்ற ஒற்றை வார்த்தைகளில்‌ என்‌ அத்தனை உணர்வுகளையும்‌ அளவிட முடியாது. ஆனால், பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தைகள்‌ இல்லையே. ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.

வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 258

2

0