மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2025, 4:27 pm

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதினத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது.

மதுரை ஆதினத்தின் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதினத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது என இந்து மக்கள் கட்சி தெரிவித்துளள்து.

மேலும் இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதினமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

மதுரை ஆதினமடத்தின் 293வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசமயாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதினம் அவர்களையும்,அவருடன் உடன் வந்தவர்களையும், வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும்,தமிழக அரசும் தெளிவுபடுத்தவேண்டும்.

சமீபகாலமாக மதுரை ஆதின மடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும்,மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரியவருகிறது

மதுரை ஆதினமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதினமடத்தில் தினந்தோறும் அன்னதானம் போன்ற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமலும், ஆதின மடத்தை மின்சார சிக்கனம் என்று ஆதின மடத்தை இருளில் போடுவதும்,மடத்திற்க்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும் தொடர்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதினமாக இருக்க தகுதியற்றவர், அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் – இந்து மக்கள் கட்சி

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?
  • Leave a Reply